தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை கூட்டம் நடத்தினார். பிறகு செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர். அப்போது செய்தியாளிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், அண்ணாவையோ, அம்மாவையோ விமர்சனம் பண்ணினார். என்ன விமர்சனம் செய்தார் ? அறிஞர் அண்ணா அவர்கள்,  1956-இல் மதுரையில் பிடி.ராஜன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதெல்லாம் எங்களுக்கு தெரியும். அவர் பகுத்தறிவை பேசினார்.

அடுத்த நாள்  பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் ஆன்மீக கருத்தை வலியுறுத்தி,  அறிஞர் அண்ணா அவர்களை மறுதலித்து பேசினார். அதற்கு அடுத்த நாள் மதுரை தமுக்கம் மைதானத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் பொதுக்கூட்டம். அதிலே முத்துராமலிங்கத் தேவர் அவர்களை தாக்குவார் என்று எல்லோரும் கூடினார்கள். ஆனால் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அறிஞர் அண்ணா அவர்கள் பேசினார். அவரைப் பற்றி ஒரு சொல் கூட சொல்லவில்லை.

ஏனென்றால் பகையை வளர்ப்பதை அறிஞர் அண்ணா அவர்கள் விரும்பியதே கிடையாது. ஆகவே இதுதான் நடந்தது. மறைந்த தவறுகளை பற்றி சொல்லுகிற போது சரியான தகவல்களை எடுத்துச் சொல்ல வேண்டும். பாஜக தலைவர் அண்ணாமலை எடுத்த தகவல்கள் தவறானவை. ஆனால் அதை உள்நோக்கத்தோடு எடுத்து சொன்னார் என்று நான் சொல்ல தயாராக இல்லை என தெரிவித்தார்.