நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முகமது அலி ஜின்னா பாகிஸ்தானுக்கு தனி நாடு கொடுங்க என கேட்கும் போது என் தாத்தா இங்க ரெண்டு பேரும்,  தனித்தமிழ் நாடு என்று கேட்டு இருந்தால்…  லாடு மவுண்ட் பேட்டனுக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல… நான் இந்தியாவைவிட்டு போக போறேன்…  இந்தியா ஒண்ணா இருந்தா என்ன ?  மண்ணா இருந்தா என்ன ?

உனக்கு என்ன வேணும் தமிழ் நாடா ? உனக்கு கேரளாவா ? உனக்கு ஆந்திராவா ? இந்த வச்சிக்கோ என பிரிச்சி கையெழுத்து போட்டு போயிட்டே இருந்து இருப்பான். எங்க ஆளுங்க…. இந்தியா நம்ம நாடு…. இப்படி பேசி விட்டுட்டு இருந்ததால் பேரன்கள்  பூராம் நெஞ்சி தண்ணீர் வலிக்க கத்திட்டு கிடக்கோம்….  நாங்க வரலாறை படிக்கும்போது கங்கை கொண்டோம்…. கடாரம் வென்றோம்…. காவிரியில் கொஞ்சோண்டு தண்ணி கொண்டோமா ? …உனக்கு புரியுதா ?  ஒன்னும் கிடையாது.

அப்போ எங்க இருந்து ஆரமிக்க வேண்டி இருக்கு பாரு?  இப்போ விடு… தாதாக்களை விடு… அவனை விடு…. தாத்தா காலத்துல இந்த பேரன் இருந்தாலும் அந்த அரசியலை தான் பேசி இருப்பேன். இப்ப எனக்கு இந்த அரசியல் கையளிக்கப்பட்டிருச்சு. அதனால எந்த சமரசம் என் வாழ்நாள்ல கிடையாது. இப்போ பல்லாயிரக்கணக்கா கூடி இருக்கீங்க,  நீங்க  எல்லாரும் போயிருங்களேன், நான் பேசிட்டு இருப்பேன்.

ஒருத்தருமே இல்லனு வைங்க…   திரும்பி இந்த பதாகையை பாத்து பேசிட்டு இருப்பேன். ஏன்னா எங்க தாத்தா பட்டுக்கோட்டை பாடுகிறான்…..காலமறிந்து கூவும் சேவல்,  கணக்காய் கூவுவது நிறுத்தாது. அது கூடையை போட்டு கவுந்தி போட்டாலும்…. கணக்காய் கூவும் டா என சொல்லிட்டேன். நீ வா… வராம போ…. ஆனால் என் பிறவி கடன்,  நான் போராடுவேன். நீ  எழுந்திரு,  எழுந்திருக்காம போ….  ஆனால் நான் கூவுவேன். ஏந்திக்கிறது உன் விருப்பம்….  ஏந்திக்காம படுத்து இருக்குறது உன் விருப்பம்…  அப்போ எங்கிருந்து தொடங்க வேண்டி இருக்கு?  என் தாய் மொழி  மீட்சியிலிருந்து நான் தொடங்க வேண்டி இருக்கு என தெரிவித்தார்.