2000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற இன்று தான் கடைசி நாளாக இருந்த நிலையில் வரும் அக்டோபர் 7ஆம் தேதி வரை 2000 ரூபாயை மாற்றி கொள்ள பொதுமக்களுக்கு கூடுதல் அவகாசம் அளித்தால் பலன் கிடைக்கும்  என்பதால் ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. இன்றுடன் ஏற்கனவே தெரிவித்திருந்த காலக்கடு முடிவடைகிறது.  ஆகவே நாளை முதல் எங்கும் 2000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த முடியாது, ரிசர்வ் வங்கி கிளைகளிலே மட்டும்தான் அதை வேறு நோட்டுகளாக மாற்றிக் கொள்ள முடியும் என்கின்ற நிலை இருந்தது.

ஆகவே யார் கையிலாவது இன்னும் 2000 ரூபாய் நோட்டுகள் இருந்தால் அதை மேலும் செலவழிப்பதற்கோ அல்லது வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்வதற்கோ அல்லது வங்கிகளிலே கொடுத்து வேறு நோட்டுகளாக மாற்றிக் கொள்வதற்கு கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆகவே பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது  ரிசர்வ் வங்கி எடுத்துள்ளது. நாட்டில் புழக்கத்தில் இருந்த 96 சதவீத 2000 நோட்டு தாள்கள் திரும்பப் பெறபட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அக்டோபர் 8க்கு பிறகு 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் 20 ஆயிரம் வரை 2000 நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் எனவும் ஆர்பியை தெரிவித்துள்ளது.