இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் மாற்றுவதற்கு அக்டோபர் 7ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவதாகவும் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை அந்த நோட்டுக்களை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. அதன்படி 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு இன்று கால அவகாசம் முடிவடைவதாக இருந்த நிலையில் தற்போது அதற்கான கால அவகாசம் அக்டோபர் ஏழாம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாட்டில் புழக்கத்தில் இருந்த 96 சதவீதம் ரூ 2,000 தாள்கள் திரும்பப் பெறப்பட்டதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதேசமயம் நீட்டிக்கப்பட்ட கெடுவிற்கு பிறகும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள 19 கிளைகளில் ரூபாய் 2,000 நோட்டுகளை மாற்றலாம். அதாவது, அக்டோபர் 8ஆம் தேதிக்கு பிறகு 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் ரூ 20,000 வரை ரூ 2,000 நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம்.