ரூ 2000 நோட்டு தாள்களை வங்கிகளில் மாற்றுவதற்கான கால அவகாசம் அக்டோபர் 7ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரூ 2000 தாள்களை புழக்கத்தில் இருந்து திரும்ப பெறுவதாக மே 19 இல் ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. 2000 ரூபாய் தாள்களை மாற்றுவது அல்லது வங்கி கணக்குகளில் திரும்ப செலுத்த அக்டோபர் 7ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்றுடன் முடிவடையவுள்ள நிலையில், அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் புழக்கத்தில் இருந்த 96 சதவீதம் ரூ 2,000 தாள்கள் திரும்பப் பெறப்பட்டதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நீட்டிக்கப்பட்ட கெடுவிற்கு பிறகும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள 19 கிளைகளில் ரூபாய் 2,000 நோட்டுகளை மாற்றலாம். அதாவது, அக்டோபர் 8ஆம் தேதிக்கு பிறகு 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் ரூ 20,000 வரை ரூ 2,000 நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம்.