உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் (பனாரஸ்) கட்டப்பட்டுள்ள ஒரு வித்தியாசமான வீடு இப்போது இணையதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. அந்த வீட்டின் அகலத்தைப் பார்த்தால் எவரும் ஒரு நிமிடம் திகைத்துப்போவார்கள். வெறும் ‘ஒரு கை’ அளவிலான அகலத்தில், மிகக் குறுகிய இடத்தில் ஒரு முழு கட்டிடத்தையே எழுப்பியுள்ளனர்.

இடப்பற்றாக்குறை உள்ள காலத்திலும், இவ்வளவு குறைவான அகலத்தில் ஒரு குடியிருப்பை உருவாக்க முடியும் என இந்த கட்டிடம் நிரூபித்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Kritika yadav (@kritika_yadav_1809)

இந்த விசித்திரமான கட்டிடத்தைப் பார்த்த மக்கள், “இப்படியும் வீடு கட்ட முடியுமா?” என வியந்து அதன் வீடியோவை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

நவீன கட்டுமானக் கலைக்குச் சவால் விடும் வகையில் அமைந்துள்ள இந்த வீடு, வாரணாசிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.