செய்தியாளர்களிடம் பேசிய தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக விளையாட்டுதுறையும் – HCL தனியார் நிறுவனமும் இணைந்து   அக்டோபர் 8-இல் சென்னையில் மிகப்பெரிய சைக்கிள் போட்டி நடத்துறாங்க. ஏற்கனவே நொய்டாலா மிகப்பெரிய போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடித்து இருந்தாங்க.. இங்கே மூணு கேட்டகிரில, வயது வாரியாக பிரிச்சி நடத்துறாங்க..

கிட்டத்தட்ட 4000-தில் இருந்து , 5,000ம்  சைக்கிள் வீரர்கள் கலந்து கொள்வதாக இருகாங்க.  முழுக்க முழுக்கHCL  தான் ஸ்பான்ஸர்  பண்ணுறாங்க, ஒரு 15 லட்ச ரூபாய்க்கு பரிசே  கொடுக்குறாங்க  அரசின் சார்பாகவும், எங்கள் துரையின் சார்பாகவும் எங்க முழு சப்போர்ட் கொடுக்குறோம். போக்குவரத்து வசதிகள்… அவங்க வந்து தங்குறதுக்கு வசதிகள் எல்லாம் பண்ணி கொடுக்குறோம்.

இந்த நிகழ்ச்சியின்  அறிமுக விழா மிக சிறப்பாக நடக்கணும்னா…  பத்திரிக்கை நண்பர்கள் நீங்கள்,  பொது மக்கள்கிட்ட கொண்டு போய் இந்த நிகழ்ச்சியை சேருங்க .. கேலோ இந்தியா போட்டி மூன்று இடங்களில் நடத்துவதற்கு முதல் கட்ட பேச்சுவார்த்தை நடந்திருக்கு. சென்னை, மதுரை, கோயம்புத்தூர். இது மிகப்பெரிய  நிகழ்ச்சி.

இதில் ரெண்டு இடம்   கடைசியா முடிவெடுத்திருக்கிறோம். இரண்டு இடத்தோட பிளஸ் என்ன? மைனஸ் என்ன ? நிறைய விஷயங்கள் கணக்குல எடுத்து இருக்கோம். ஏர்போர்ட்ல இருந்து எவ்வளவு தூரம் ?  பக்கத்துல இருக்குற ஹோட்டல் எத்தன ? இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்கள் எல்லாம் ரெடி பண்ணிக்கிட்டு இருக்கோம் என தெரிவித்தார்.