
இந்தியாவின் அதிவேக டெலிவரி சேவையால் ஆச்சரியத்தில் ஆழ்ந்த போலந்து நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி விக்டோரியா. இந்தியாவில் சுற்றுலா பயணமாக வந்திருந்த இவர், Blinkit மூலமாக ஆர்டர்செய்த தர்ப்பூசணியை வெறும் 5 நிமிடத்தில் வீட்டுக்கு கிடைத்ததைப் பார்த்து, “இந்தியா எதிர்காலத்தில் வாழ்கிறது” என்ற வாசகத்துடன் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில், தனது படுக்கையில் அமர்ந்து தர்ப்பூசணிக்காயை ஸ்பூனால் நறுக்கி சாப்பிடும் காட்சி இடம்பெற்றுள்ளது. அதோடு, “நடுநிசியில்கூட இது போல ஆர்டர் பண்ண முடிஞ்சுது, இந்தியா அப்ப்ஸ் நெறையா நன்றா இருக்கு” எனவும், “5 நிமிடத்தில் பழங்களை வீட்டில் உடனடியாகப் பெற முடிகிறது என்பது நம்ப முடியவில்லை” எனவும் பதிவிட்டுள்ளார். மேலும், மாம்பழம் மற்றும் குடிநீர் போன்ற பிற பொருட்களையும் எடுத்துக் காட்டியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
View this post on Instagram
அந்த வீடியோ வைரலானதை அடுத்து பலரும் இந்தியாவில் ஃபாஸ்ட் டெலிவரி சேவையை பாராட்டி கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர் குறைந்த ஊதியத்தில் வேலை செய்யும் டெலிவரி பணியாளர்களின் நிலையை குறித்து கருத்து தெரிவித்தனர். மேலும் இதுபோன்று சுற்றுலாப் பயணிகளின் அனுபவம் குறித்த வீடியோக்கள் இந்தியாவின் டிஜிட்டல் வசதிகளை உலகம் எங்கும் வெளிப்படுத்துவதோடு, பணியாளர்களின் உழைப்பை பாராட்டும் விதமாகவும் அமைகிறது.