ஈரோடு மாவட்டத்தில் உள்ள காந்திபுரம் பகுதியில் 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உடைய பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி அமைந்துள்ளது. இந்த தொட்டியில் சேகரிக்கப்படும் குடிநீர் 20 லிட்டர் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த குடிநீரை பொதுமக்கள் விலைக்கு வாங்கி சென்று பயன்படுத்தினார். நேற்று மதியம் கோடை வெப்பத்தினால் பிளாஸ்டிக் தொட்டி பயங்கர சத்தத்துடன் வெடித்து கீழே விழுந்தது.

சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அறிந்த முன்னாள் அமைச்சர் கே.சி கருப்பணன் எம்.எல்.ஏ பிளாஸ்டிக் குடிநீர் தொட்டியை பார்வையிட்டு புதிதாக குடிநீர் தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.