
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தங்களது பொழுதை வெளி உலகிற்கு சென்று கழித்து வருகின்றனர். அவர்களை கவருவதற்காக உரிமையாளர்கள் பல்வேறு விதமான புது முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் ஹோட்டல் உரிமையாளர்கள் பொம்மை வேடம் அணிந்து வருகை தரும் வாடிக்கையாளர்களை வரவேற்தல், ஓட்டல் வாசலில் நடனமாட செய்தல் உள்ளிட்டவற்றை செய்து வருகின்றனர்.
அந்த வகையில் சீனாவிலுள்ள கஃபே உரிமையாளர் ஒருவர் வித்யாசமான முறையில் சிந்தித்து தனது கஃபே ஒன்றில் பணிபுரிய பூனைகள் தேவை என்று விளம்பரம் செய்துள்ளார். மேலும் பகுதி நேரமாக வேலை செய்யும் பூனைக்கு ஊதியமாக தினமும் இலவச ஸ்னாக்ஸ் வழங்கப்படும் எனவும், அதன் உரிமையாளரின் நண்பர்களுக்கு 30 % சலுகையும் அறிவித்துள்ளார். அதில் வேலைக்கு பணியமர்த்தப்படும் பூனை கஃபையை சுற்றி வந்து அங்கு வரும் வாடிக்கையாளர்களுடன் விளையாடுவதே அதன் வேலையாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.