செங்கல்பட்டு காட்டாங்களத்தூரிலுள்ள சிவானந்த சரஸ்வதி சேவாஷ்ரமின் 75வது பவளவிழா நடந்தது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று பேசியதாவது, இணையதள வசதியை பயன் உள்ள அடிப்படையில் மாணவர்கள் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். அதனை தொடர்ந்து சிவானந்த சரஸ்வதி பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். தற்போது 24-மணி நேரமும் இணையதளவசதி கிடைக்கிறது.

அதோடு மாணவர்கள் நல்ல முறையில் இணையதளத்தை பயன்படுத்தினால் அதை விட, கல்விக்கு சிறந்த கருவி வேறு ஏதும் இல்லை என கூறினார். இதற்கிடையில் தமிழகத்தில் பிடித்த உணவு எது என்று மாணவி ஒருவர் ஆளுநரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு, தனக்கு நெய் அதிகம் சேர்த்த பொங்கல் மற்றும் இனிப்பில் கேசரி பிடிக்கும் என ஆளுநர் தெரிவித்துள்ளார்.