
2023 ஆம் வருடத்தில் தன் முதல் மன் கி பாத்தின் உரையை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று (ஜன.,29) நிகழ்த்தினார். அப்போது நாட்டு மக்களுக்கு முன்பு மோடி உரையாற்றியபோது, நடப்பு ஆண்டு பத்ம விருது பெற்றவர்கள் பற்றி அனைவரும் படிக்க வேண்டும் என்று நாட்டு மக்களை வலியுறுத்தி பேசினார்.
மேலும் அவர் பேசியதாவது “தமிழ்நாட்டில் ஒரு சிறிய பிரபலமான கிராமம் ஒன்று இருக்கிறது. அந்த கிராமத்தின் பெயர் உத்திர்மேரூர் ஆகும். இங்கு 11 ஆயிரம், 12 ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய கல்வெட்டு இருக்கிறது. அது உலகையே ஆச்சரியப்பட வைக்கிறது. இந்த கல்வெட்டு ஒரு சிறிய அரசியலமைப்பு போன்றது ஆகும்” என்று அவர் பேசினார்.