வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மிஸ்டர் லோக்கல் ஆகிய திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ஷாலு ஷம்மு. இவர் 2 மாதங்களுக்கு முன் ரூபாய்.2 லட்சம் மதிப்புள்ள ஐபோனை வாங்கி உள்ளார். சென்னை எம்ஆர்சி நகரிலுள்ள நட்சத்திர விடுதியில் சென்ற 9-ஆம் தேதி இரவு ஷாலு ஷம்மு நண்பர்களுடன் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

அதன்பின் நிகழ்ச்சி முடிந்து சூளைமேட்டிலுள்ள அவரது நண்பர் வீட்டில் தங்கி இருக்கிறார். அடுத்தநாள் எழுந்து பார்க்கையில் ஷாலு ஷம்மு செல்போன் காணாமல் போயுள்ளது. உடனே ஷாலு ஷம்மு நட்சத்திர விடுதிக்கு சென்று தேடி பார்த்துள்ளார். இந்நிலையில் ஷாலு ஷம்முவுக்கு டன்சோ வாயிலாக பார்சல் ஒன்று வந்திருக்கிறது.

அதில் காணாமல் போனதாக புகாரளிக்கப்பட்ட அவரது விலையுயர்ந்த ஐபோன் இருந்துள்ளது. இதன் காராணமாக அதிர்ச்சியடைந்த ஷாலு ஷம்மு கூறியதாவது, தான் சந்தேகப்பட்ட நபர் தான் தன் செல்போனை திருடியிருப்பதாகவும், 8 வருட நட்பு வீணாகி இருப்பதாகவும் சமூகவலைதளத்தில் வருத்தத்துடன் பதிவிட்டு உள்ளார். ஷாலு ஷம்முவின் இப்பதிவு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.