உங்கள் வீட்டுக்கடனை முன்கூட்டியே செலுத்துவதற்குரிய ஆப்ஷன் உங்களுக்கு இருக்கிறது. உங்களது கடன் காலம் 20 வருடங்களாக இருந்தாலும், குறைந்த காலத்தில் கடனை திருப்பி செலுத்துவதன் வாயிலாக லட்சக்கணக்கான ரூபாயை சேமிப்பீர்கள். அதுகுறித்து நாம் தற்போது தெரிந்துக்கொள்வோம். உங்களிடம் இருக்கும் கடனின் வகையைப் பொறுத்து உங்கள் மாதாந்திர தவணையை அதிகரிக்க இது உங்களுக்கு உதவும். மாதாந்திர கட்டணத்தினை அதிகரிப்பதன் வாயிலாக கடனை முன்கூட்டியே அடைத்துவிடலாம்.

மேலும் குறிப்பிட்ட தொகையை மொத்தமாக, வருடத்திற்கு ஒருமுறை அடைப்பதன் வாயிலாக அசல் தொகையும் வட்டியும் குறைந்துகொண்டே செல்லும். கடனின் காலப் பகுதியில் உங்களது வட்டி விகிதத்தை குறைப்பதன் மூலமாக வங்கி நிவாரணம் வழங்க முடியுமா என்பதை சம்மந்தப்பட்ட வங்கியுடன் ஆலோசிக்கலாம். இது முடியவில்லையெனில் குறைந்த வட்டியில் கடன் அளிக்கும் வங்கிக்கு உங்களது கடனை மாற்றலாம்.

இதன் காரணமாக உங்கள் வட்டியும் இஎம்ஐ தொகையும் குறையும். இதனால் பழைய EMI தொகையை குறைக்கலாம். அத்துடன் புது வங்கியிலும் அதே அளவுக்கு இஎம்ஐ தொகை செலுத்தி வந்தால், கடனை வெகு சீக்கிரம் அடைத்துவிடலாம். மேலும் மொத்த தொகையை செலுத்துவதன் வாயிலாக உங்களது வீட்டுக்கடன் காலத்தை குறைக்கலாம்.