கார்த்தி நடித்த விருமன் திரைப்படத்தில் அறிமுகமானவர் டைரக்டர் ஷங்கரின் மகள் அதிதி. முதல் திரைப்படமே அவருக்கு வெற்றியை தேடிக் கொடுத்தது. இதையடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் திரைப்படத்தில் நிருபர் வேடத்தில் அதிதி நடித்து வருகிறார். இந்த நிலையில் அதிதி விஷ்ணுவர்தன் இயக்கி வரும் புது படத்திலும் நாயகியாக இணைய இருக்கிறாராம். இத்திரைப்படத்தில் அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி ஹீரோவாக நடிக்கிறார்.

சென்னையில் இப்படத்தின் சூட்டிங் தற்போது நடந்து வருகிறது. தளபதியின் மாஸ்டர் படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ தயாரித்து வரும் இத்திரைப்படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இதனிடையே தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவின் மகள் சினேகாவை தான் ஆகாஷ் முரளி திருமணம் செய்து உள்ளார். இவர்களது திருமணம் 2020ம் ஆண்டு நடந்தது குறிப்பிடத்தக்கது.