திருமங்கலம் உள்ளிட்ட வழித் தடங்களில் ரயில் தண்டவாளம் பராமரிப்பு பணி காரணமாக முக்கியமான வழித்தடங்களில் இயக்கப்படும் விரைவு ரயில்களானது ரத்து செய்யப்பட இருக்கிறது. சென்னை எழும்பூர்-காரைக்குடி இடையில் இயக்கப்படும் பல்லவன் விரைவு ரயில் வருகிற 16-28ம் தேதிக்கு இடைப்பட்ட காலங்களில் 13 நாட்களும், காரைக்குடி-சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் பல்லவன் விரைவு ரயில் 17- 28ம் தேதிக்கு இடையில் 7 நாட்களுக்கும் ரத்து செய்யப்படுகிறது. சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு இரவு 10:05 மணிக்கு புறப்படும் அதிவேக விரைவு ரயில் 17, 19, 24 மற்றும் 26 போன்ற தேதிகளிலும், மதுரையில் இருந்து சென்னை எழும்பூருக்கு இரவு 10:50 மணிக்கு புறப்படும் அதி வேக விரைவு ரயில் 16, 17, 19,25 போன்ற தேதிகளிலும் ரத்து செய்யப்படுகிறது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மதுரைக்கு புறப்படும் அதி வேக விரைவு ரயில் 22, 24, 27 ஆம் தேதிகளிலும், மதுரையில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு புறப்படும் அதி வேக விரைவு ரயில் 23, 26 மற்றும் 28ம் தேதிகளிலும் இயக்கப்படாது. அதன்பின் பாலக்காட்டில் இருந்து புறப்படும் பாலக்காடு – திருச்செந்தூர் விரைவு ரயிலும், திருச்செந்தூரில் இருந்து புறப்படும் திருச்செந்தூர்-பாலக்காடு விரைவு ரயிலும் 9ம் தேதி முதல் 28ம் தேதி வரை இயக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.