திருநெல்வேலியில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது, “ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் அதிமுக நிச்சயம் வெற்றி பெரும். திமுக இத்தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை. அ.தி.மு.க தான் பல நலத்திட்டங்களை வழங்கியது.

இடைத் தேர்தலின் வெற்றி நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும். அந்தந்த சூழ்நிலைக்கு தகுந்தபடி கூட்டணி அமைக்கப்படும். தற்போது பாஜக எங்களோடு தான் உள்ளது. நாடாளுமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணியானது தொடரும். இருகட்சிகளுக்கு இடையில் எந்த நெருடலும் இல்லை” என இபிஎஸ் கூறினார்.