ஒவ்வொரு ஆண்டும் அந்த ஆண்டுக்கான கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 விஷயங்கள் அந்நிறுவனம் வெளியிடும். அந்த வகையில் இந்த ஆண்டு கூகுளில் அதிகமாக தேடப்பட்ட வார்ட் டாப் 10 வார்த்தைகள் லிஸ்ட் இதோ. 2024ம் ஆண்டு கூகுளில், ‘All Eyes on Rafah’ முதலிடத்தை பிடித்துள்ளது. பாலஸ்தீன நாட்டின் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தியது. இதை கண்டிக்கும் விதமாக ‘All Eyes on Rafah’ என்ற வாக்கியம் இணையதளத்தில் டிரெண்டானது குறிப்பிடத்தக்கது. 2ம் இடத்தை பிரபல கிரிக்கெட் வீரர் கோலி-அனுஷ்கா தம்பதியின் மகனான  அகாய் பிடித்துள்ளது. மூன்றாவதாக கர்ப்பப்பை புற்று நோய் என்ற வார்த்தை இடம் பிடித்துள்ளது. இந்தியாவில் பெண்கள் அதிக அளவில் இந்த புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.

இதையடுத்து ‘Tawaif’ என்ற வார்த்தை 4ம் இடத்தை பிடித்துள்ளது. மன்னர் ஆட்சி காலத்தில் மன்னர்கள் முன்பு செல்லும் பெண்களை ‘Tawaif’ என்று அழைப்பார். 5ம் இடத்தில் ‘Demure’ என்ற வார்த்தை இடம் பிடித்துள்ளது. இதைத்தொடர்ந்து ‘Pokkie’ என்ற வார்த்தை 6ம் இடத்தை பிடித்துள்ளது. இந்த வார்த்தை தனக்கு பிடித்தவர்களை செல்லமாக அழைப்பதாகும். 7ம் இடத்தில் ‘Stampede’ என்ற வார்த்தை உள்ளது. ‘Moye Moye’ என்ற வார்த்தை 8ம் இடத்தை பிடித்துள்ளது. இந்த வார்த்தைக்கு அர்த்தம் தனிமையில் அல்லது சோகத்தில் இருப்பதாகும். இதையடுத்து ‘Consecration’ என்ற வார்த்தை 9ம் இடத்தை பிடித்துள்ளது. கடைசியாக ‘Good Friday’ என்ற வார்த்தை பட்டியலில் 10ம் இடத்தை பிடித்துள்ளது. புனித வெள்ளி என்பது இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த நாளாகும்.