கடந்த நவம்பர் 30ம் தேதி, மும்பையில் உள்ள கல்லூரி மாணவி ஒருவர் மினி பேருந்தில் பயணம் செய்த போது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் இந்த சம்பவத்தின் ஒரு வீடியோ ஆன்லைனில் வெளிவந்தது. அதில் ஒரு நபர் ஒரு மாணவியின் அருகில் பேருந்தில் அமர்ந்து கொண்டிருக்கிறார். அப்போது அவர் சுய இன்பம் செய்வதை காணலாம்.

இது குறித்து அவரது தோழி கூறியதாவது, நவம்பர் 30 அன்று கல்லூரியிலிருந்து கிராண்ட் ரோடு நிலையத்திற்கு மினி பஸ் மூலம் வீடு திரும்பி கொண்டிருந்த போது, இந்த சம்பவம் நிகழ்ந்தது. அவர் முன்னிலையில் டாக்ஸியில் அந்த நபர் சுய இன்பம் செய்ததாக பாதிக்கப்பட்ட பெண்ணின் நண்பர் கூறினார். இந்த சம்பவத்தால் என் நண்பர் இன்னும் அதிர்ச்சியில் இருக்கிறார். அவர் மனநிலை பிரச்சனைகளால் அவதிப்படுகிறார். தயவு செய்து ஏதாவது செய்யுங்கள் என்று அவர் மின்னஞ்சல் அனுப்பி உள்ளார்.