
உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி. இவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 1025 நாட்களுக்குப் பிறகு சதம் அடித்தார். இதன் மூலம் விராட் கோலி தன்னுடைய 28-வது சதத்தை பதிவு செய்துள்ளார். அதன் பிறகு கோலி ஒரு நாள் போட்டியில் 46 சதமும், 20 ஓவரில் ஒரு செஞ்சூரியும் அடித்திருந்தார். இவர் சர்வதேச போட்டிகளில் மொத்தமாக 75 சதம் அடித்து சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்து 2-வது இடத்தில் இருக்கிறார்.
சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் போட்டிகளில் 51 சதமும், ஒரு நாள் போட்டியில் 49 சதமும் அடித்து முதலிடத்தில் இருக்கிறார். இந்நிலையில் சச்சின் சாதனையை கோலி முறியடிப்பார் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவர் சச்சின் சாதனையை கோலி முறியடித்து 110 சதங்கள் வரை எடுப்பார் கூறியுள்ளார். மேலும் விராட் கோலி மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. அவர் கண்டிப்பாக சச்சினின் 100 சர்வதேச சதங்கள் சாதனையை முறியடித்து 110 சதங்கள் வரை எடுப்பார் என்றும் கூறியுள்ளார்.