இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டிகள் இன்று தொடங்குகிறது. 3 போட்டிகள் கொண்ட தொடரின் ஒரு பகுதியாக இரு அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டி வான்கடே மைதானத்தில் இன்று நடக்கிறது. இந்த ஃபார்மட்டில் தொடர் வெற்றிகளுடன் இந்தியா இருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியிலிருந்து ரோகித் சர்மா விலகியதால் இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப் பட்டுள்ளார். ஒரு நாள் போட்டிகளை பொறுத்தவரையில் ஆஸ்திரேலியா அணி அதிக வெற்றிகளை பெற்றுள்ளது. இதுவரை இரு அணிகளும் மோதியுள்ள 143 ஒரு நாள் போட்டிகளில் ஆஸ்திரேலியா 80 போட்டிகளிலும் இந்தியா 53 போட்டிகளிலும் 10 போட்டிகள் முடிவு இல்லாமலும் போயுள்ளன.

இந்திய மண்ணில் இதுவரை நடந்துள்ள 10 தொடர்களில் இரு அணியும் தலா 5 தொடர்களை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இன்று நடைபெறும் ஒரு நாள் போட்டியை இந்திய அணி கைப்பற்றினால் ஒரு நாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணி 2-வது இடத்தில் இருந்து முதல் இடத்திற்கு முன்னேறி விடும். இந்த தொடரை இந்திய அணி 3-0 என கைப்பற்றினால் 117 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், ஆஸ்திரேலிய அணி 111 புள்ளிகளுடன் 4-வது இடத்திற்கும் தள்ளப்படும். ஆனால் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றினால் 3-0 என கைப்பற்றினால் இந்திய அணி 4-வது இடத்திற்கு சென்று விடும்.