செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள இருங்குன்றம் புள்ளியில் தமிழ்மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த பிப்ரவரி மாதம் பொக்லைன் இயந்திரம் மூலம் ஒருவர் தனது வீட்டை இடித்து விட்டதாக செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது காவல் நிலைய எழுத்தர் சண்முகம் எதிர் தரப்பினர் மீது வழக்கு பதிவு செய்ய தமிழ்மணியிடமிருந்து இரண்டு லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கியதாக தெரிகிறது. மேலும் தமிழ்மணியிடம் பணத்தை வாங்கிக் கொண்டு அவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால் தமிழ்மணி தான் கொடுத்த பணத்தை திரும்பி கேட்டுள்ளார். இருவரும் பேசிக் கொண்டிருந்த ஆடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் பிரனீத் விசாரணை நடத்தி சண்முகத்தை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். முன்னதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க வருபவர்களிடம் சண்முகம் கணிசமான தொகையை லஞ்சமாக பெற்றது விசாரணையில் தெரியவந்தது.