தமிழகத்திற்கு முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது தடையில்லா மின்சாரம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அமித்ஷா வருகையின்போது மின் தடை ஏற்பட்டது பெரும் சர்ச்சையான நிலையில், முக்கிய பிரமுகர்கள் வருகையின் போதும், பிரதான அரசு நிகழ்வுகளின் போதும், மின்சார வாரிய அதிகாரிகள், நிகழ்வு நடைபெறும் இடங்களை ஆய்வு செய்து, மாற்று ஏற்பாடுகளையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.