ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. இன்று காலை விறுவிறுப்பாக வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா ஆகிய இரண்டு தொகுதிகளிலும் முதலில் காங்கிரஸ் முன்னிலை வகித்த நிலையில் ஹரியானாவில் பாஜக முன்னிலை வகித்தது.
நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்த்த வினேஷ் போகத் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். ஹரியானாவில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 48 இடங்கள் தேவைப்படும். அப்படி இருக்க ஜூலானா தொகுதியில் போட்டியிட்ட வினேஷ் போகத் 6050 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.