தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு வென்டிலேட்டரில் சிகிச்சை என தகவல் வெளியாகியுள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சுவாசிக்க சிரமப்படுவதால் வென்டிலேட்டரில் சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.  கடந்த  8-ம் தேதி அவர் சென்னை நந்தம்பாக்கத்தில் இருக்கக்கூடிய மியாட் தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு மூச்சு விடுவதில் மிகுந்த சிரமம் மற்றும் இடைவிடாது இருமல் போன்ற பல்வேறு உபாதைகள் இருந்ததன் காரணமாக அவர்  உள் நோயாளிகளுக்கு அனுமதிக்கப்பட்டு,  மருத்துவர்களுடைய பரிந்துரைப்படி  சிகிச்சையானது தொடர்ந்து அளிக்கப்பட்டு வந்தது.

அவருக்கு  மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததன் காரணமாக தேவையான மருத்துவ சிகிச்சைகள் மட்டுமல்லாமல்,  பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படு  மருத்துவ சிகிச்சை அளிக்கபட்டு வந்தது. இந்நிலையில் நிலையில் இன்று காலை மியாட் மருத்துவமனை சார்பில் மருத்துவ அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கடந்த 24 மணி நேரத்திற்கு மேலாக அவருக்கு சீராக மூச்சு விடுவதில் சீராக சிரமம் இருந்ததன் காரணமாக மேலும் 14 நாட்கள் அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்த பட்டு இருந்தது.

விஜயகாந்த் வாய் வழியாகவும் மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால், மூச்சுக் குழல் வழியே வழியாக அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன்  சீராக சிரமமில்லாமல் மூச்சி விடுவதற்கான சிகிச்சை வழங்குவதற்கு மருத்துவ  ஆலோசனையும் நடைபெற்று வருவதாகவும் சொல்லப்பட்டுள்ளது. அதே போல  விஜயகாந்துக்கு சுவாசத்தை எளிதாக்க டிரக்கியாஸ்டமி சிகிச்சை வழங்கத் திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.