தமிழக முழுவதும் புதியதாக மின் இணைப்பு பெறவும், பெயர் மாற்றம் செய்யவும் ஆன்லைன் வசதியானது கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த வகையில் புதிய இணைப்பை பெறுவதற்கு  www.tangedco.org என்ற அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு வரும் விண்ணப்பங்களுக்கு தமிழக அரசு மின்சார வாரியத்தில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் மூலம் மின் இணைப்பு வழங்கப்படுகிறது. இதில் புதிய மின் இணைப்பு கேட்டு 30 நாட்கள் வரை காலதாமதம் ஆவதாக புகார் எழுந்துள்ளது. இதனை பரிசீலனை செய்த நிலையில் அதற்கான வரைவு அறிக்கையை கடந்த மே மாதம் வெளியிட்டது.

அதில் விண்ணப்பித்த 10 நாட்களுக்குள் மின் இணைப்பை வழங்க வேண்டும் அவ்வாறு தாமதம் ஏற்பட்டால் ஒவ்வொரு நாளுக்கும் தலா 100 ரூபாய் அபராதம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது மின்வாரியம். ஆனால் விண்ணப்பதாரர்கள் தேவையில்லாமல் அலைக்கழிக்கப்படுவதாக மீண்டும் புகார் எழுந்த நிலையில் மின்வாரிய அதிகாரிகள் சேவைகள் தாமதம் செய்வது குறித்த புகார்களை இணையத்தில் அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. அதேபோல உயர் அதிகாரிகளிடம் சம்பந்தப்பட்ட பணியாளர்கள் குறித்து எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.