பருவமழை காலமான தற்பொழுது தமிழகத்தை பொறுத்தவரையிலும் டெங்கு, மஞ்சள் காமாலை, வைரஸ் காய்ச்சல் போன்ற தொற்றுகள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் புதுச்சேரியில் இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதன் காரணமாக புதுச்சேரி சுகாதாரத்துறை பொதுமக்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி காய்ச்சல் பரவல் தொடர்பிற்காக மக்கள் கட்டாயமாக மாஸ் அணிய வேண்டும்.

நெரிசலான இடங்களுக்கு செல்வதை தவிர்த்து கொள்ள வேண்டும். நாள்பட்ட நோய் உள்ளவர்கள் காய்ச்சல், சளி இருமல் சுவாசம் பிரச்சனை போன்ற அறிவுரைகளால் பாதிக்கப்படும் பட்சத்தில் அருகில் உள்ள சுகாதார நிலையத்தில் கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பதன் மூலம் காய்ச்சல் பரவுவதை தடுக்கலாம். தனிப்பட்ட சுகாதாரம் போன்றவற்றை மேற்கொண்டு நோய்களை பரவாமல் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.