தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவர் நடிகராக மட்டுமின்றி குணச்சித்திர வேடம் மற்றும் வில்லனாகவும் கலக்கி வருவதால் பிற மொழிகளிலும் விஜய் சேதுபதிக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் பாலிவுட் சினிமாவில் நடிகை கத்ரீனா கைப்புடன் மெரி கிறிஸ்துமஸ், ஷாருக்கான் நடிக்கும் ஜவான் போன்ற படங்களில் விஜய் சேதுபதி லீடிங் ரோலில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி முதல் முறையாக ஒரு வெப் தொடரில் நடித்துள்ளார். தி ஃபேமிலி மேன் என்ற வெப் தொடரின் மூலம் புகழ்பெற்ற ராஜ் மற்றும் டி.கே இணைந்து தற்போது பார்சி என்ற வெப் தொடரை இயக்கியுள்ளனர்.

இந்த வெப் தொடரில் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள நிலையில் மற்றொரு ஹீரோவாக சாகித்  நடித்துள்ளார். இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோஷன் விழா சமீபத்தில் நடைபெற்ற நிலையில் நடிகர் விஜய் சேதுபதி கலந்து கொண்டு பேசியது பலரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியதோடு, ரசிகர்களுக்கு வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விழாவில் விஜய் சேதுபதி பேசியதாவது, என்னிடம் யாராவது ஹிந்தி ப்ராஜெக்ட்டில் நடிக்கிறீர்களா என்று கேட்டால் நான் சாகித்துடன் நடிக்கிறேன் என்று சொல்ல வேண்டி இருக்கிறது. அதன் பிறகு தான் அப்படியா சூப்பர் என்று சொல்கிறார்கள்.

ஹிந்தி ப்ராஜெக்ட்டைப் பொறுத்த வரையில், நான் ஷாருக்கான் படத்தில் நடிக்கிறேன். கத்ரீனா கைப்புடன் இணைந்து நடிக்கிறேன் என்று சொல்ல வேண்டி இருக்கிறது. அவர்களின் பெயர்களை சொன்னால் தான் மதிக்கிறார்கள். நான் யாருடன் சேர்ந்து நடிக்கிறேன் என்பது முக்கியம் பெறுகிறது என்று கூறினார். இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி தன் திறமைக்காக பாராட்டமால் மற்றவர்களுடன் சேர்ந்து நடிப்பதால் தான் மதிக்கிறார்கள் என்று சொன்னது பலரது மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விஜய் சேதுபதியின் மனதில் எவ்வளவு கஷ்டங்கள் இருந்தால் இப்படி வெளிப்படையாக மேடையில் பேசி இருப்பார் என்று தமிழ் ரசிகர்கள் பலரும் வருத்தப்படுகிறார்கள்.