தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, சரத்குமார், பிரகாஷ் ராஜ், யோகி பாபு, சாம் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படம் கடந்த 11-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதன்பிறகு தமிழில் துணிவு திரைப்படமும் ஜனவரி 11-ல் ரிலீஸானதால் துணிவு படத்தை விட வாரிசு பின் தங்கியதாக கூறப்படுகிறது.

இதனால் வாரிசு படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்துள்ளது என்று கூறப்பட்டாலும் தமிழை தாண்டி பிற மொழிகளில் வாரிசு திரைப்படம் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்நிலையில் வாரிசு படத்தின் மொத்த வசூல் விவரம் குறித்த தகவலை தற்போது படகுழு அதிகாரப்பூர்வமாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. அதன்படி வாரிசு திரைப்படம் 150 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்துள்ளது. மேலும் படக்குழு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பாளர் தளபதி ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.