தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பல வெற்றி படங்களை கொடுத்தவர் நடிகர் சரத்குமார். இவர் தற்போது படங்களில் அப்பா வேடம் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்துள்ள  நிலையில் வாரிசு இசை வெளியீட்டு விழாவின் போது நடிகர் விஜய் தான் தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் என்று கூறியிருந்தார். இதற்கு ரஜினி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நடிகர் சரத்குமாரிடம் சமீபத்திய பேட்டியின் போது தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு நடிகர் சரத்குமார் திடீரென கோபப்பட்டார். எப்போதோ  பேசியதை இப்போது எதற்காக சர்ச்சையாக மாற்றுகிறீர்கள். நான் கூட சுப்ரீம் ஸ்டார் தான். இது சூப்பர் ஸ்டாரை விட பெருசு ஆகிடுமா என்று கோபத்தில் சண்டையிட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் youtube சேனல் ஒன்றுக்கு நடிகர் சரத்குமார் கொடுத்த பேட்டியின் போது மக்கள் மனதை யார் வெல்கிறார்களோ அவர்கள் அனைவருமே சூப்பர் ஸ்டார் தான் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.