2026 டி20 உலகக் கோப்பையின் ‘மகுடம்’ என்று அழைக்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நாளை (பிப். 15) கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டிக்கு இன்னும் சில மணிநேரங்களே உள்ள நிலையில், நேற்று (பிப். 13) மைதானப் பராமரிப்புப் பணியின் போது சுமார் 4 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு (Rat Snake) ஒன்று மைதானத்திற்குள் ஊர்ந்து சென்றது. இதைக் கண்ட ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

“>

 

அந்தப் பாம்பை லாவகமாகப் பிடித்த ஊழியர்  “இது விஷமற்ற பாம்பு; எலிகளைத் தேடி வந்திருக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார். இந்தப் பாம்பின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை எழுப்பியுள்ளது.