2026 ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடருக்காக இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் டேரில் மிட்செல், நேற்று (பிப். 13) இரவு அகமதாபாத் நகரில் தனது மனைவியுடன் ஆட்டோ ரிக்ஷாவில் பயணித்துள்ளார்.
இன்று நரேந்திர மோடி மைதானத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முக்கியமான ஆட்டம் நடைபெறவுள்ள நிலையில், எவ்விதப் பாதுகாப்பு ஆடம்பரமும் இன்றி சாதாரண மக்களைப் போல அவர் ஆட்டோவில் சென்றது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
Daryl Mitchell enjoying autorickshaw ride in Ahmedabad. 😄❤️pic.twitter.com/ooDX2PVWk6
— Mufaddal Vohra (@mufaddal_vohra) February 14, 2026
“>
கடந்த ஒரு மாதமாக நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருவதால், உள்ளூர் கலாச்சாரத்துடன் அவர்கள் பெரிதும் இணைந்துவிட்டனர். குறிப்பாக, ஆடம்பரக் கார்களைத் தவிர்த்துவிட்டு ஆட்டோ ஓட்டுநரிடம் சகஜமாகப் பேசிக்கொண்டே மிட்செல் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
