செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,  சினிமா அரசியல் பேச முக்கியமான கருவி. எத்தனையோ கருத்தாக்கம் காலம் காலமாக சினிமாவில் இருந்து வருது. நாம்  பார்க்கிறோம். குறிப்பாக தமிழக அரசியலை பொருத்தவரை சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி  இருக்கு. எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு நம்முடைய மாநிலத்தில் சினிமா அரசியலில் ஆதிக்கம் செலுத்தி இருக்கு.

சினிமாவில் என்ன கருத்துக்கள் சொல்கிறோம் அப்படிங்குறது இருக்கு. நானே பல இடத்தில் குற்றம் என்ன சுமத்துறேன் அப்படின்னா… நிறைய ஜாதி வன்மம் வரக்கூடிய படம் தமிழ் சினிமாவில் வருது.  அதை வந்து எத்தனையோ விதத்தில் சொல்லலாம். அதற்கும் பள்ளிக்கூடத்தில் குழந்தைகள்  ஜாதி பேசுவதற்கும் நேரடியா தொடர்பு இருக்குன்னு நான் குற்றம் சுமத்துறேன்.

குழந்தைகள் எல்லாம் சினிமாவால் பாதிக்கப்படுகின்றார்கள். சிகரெட் பிடிக்க கூடாது என சினிமாவில் போடக் காரணம் என்னனா…  அது பாதிப்பை உருவாக்கும். நேரம் சினிமா முக்கியம் தான். அந்த கருத்தில் நான் மாறுபடவில்லை.அதே நேரத்தில் என்ன கருத்துக்களை சொல்லுகின்றோம் அப்படிங்குறது ரொம்ப முக்கியம்.ஒரு இயக்குனராக நமக்கு அதிகப்படியான கருத்துக்கள் இருக்கலாம். அதை சினிமாவை பயன்படுத்தி திணிக்கணும்னு நினைக்கும் போது அது  தவறா போய்டும்.

வெற்றிமாறன் அவர்கள் மீது எனக்கு நல்ல மரியாதை வைத்திருக்கிறேன். நிறைய படங்கள் எடுக்குறாங்க. முக்கியமான படங்கள் எடுக்குறாங்க. அவர் சொன்ன கருத்தில் நான் உடன் படுறேன். முக்கியமான கருத்து சினிமா மூலமாக சொல்லணும். அதே நேரத்துல அதை ரொம்ப அதிகப்படியாக சொல்லும் போது, சமீபத்தில் நடக்கக்கூடிய வன்முறைகளுக்கு சில இடத்தில் சினிமாவே காரணமாக இருக்கிறது என தெரிவித்தார்.