வர்ஸ் இனோவேஷன் – வருவாய் வளர்ச்சி, நஷ்டக் கட்டுப்பாடு!
பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட, இந்தியாவின் முன்னணி உள்ளூர் மொழித் தொழில்நுட்ப மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த நிறுவனம் வர்ஸ் இனோவேஷன், 2025 நிதியாண்டில் வலுவான நிதி மற்றும் செயல்திறன் வளர்ச்சியைப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 88% வருவாய் அதிகரித்துள்ளதோடு, EBITDA அடிப்படையிலான நஷ்டம் 20% குறைக்கப்பட்டதாக நிறுவனம் அறிவித்துள்ளது. இதனுடன், விளம்பர வருவாய் அதிகரிப்பு, புவியியல் விரிவாக்கம் மற்றும் செயல்திறன் மேம்பாடு ஆகியவையும் வலுவான முன்னேற்றத்தைக் காட்டியுள்ளன.
வருவாய் வளர்ச்சி, செயல்திறன் கட்டுப்பாடு மற்றும் பன்முகப்படுத்தல் ஆகியவை FY25-இல் நிறுவனத்தின் முக்கிய சாதனைகளாகக் குறிப்பிடப்படுகின்றன. குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான விரிவாக்கம், சந்தை பங்களிப்பை அதிகரித்துள்ளது. இதன் மூலம் 2026 நிதியாண்டின் இரண்டாம் பாதியில் குழும மட்டத்தில் லாபகரமான நிலையை அடையும் வலுவான அடித்தளத்தை நிறுவனம் அமைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
