இந்தியாவில் கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் மக்களை சிரமப்படுத்தி வருகிறது. கொரோனாவை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்தது. கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கி இருக்கிறது. இதன் காரணமாக மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி இருக்கிறது.

இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள சூழலில், புதுச்சேரியில் முகக்கவசம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேரிடர் மேலாண்மை அதிகாரியும், புதுச்சேரி மாவட்ட ஆட்சியருமான வல்லவன் வெளியிட்ட அறிவிப்பில் “கடற்கரை, சந்தை, திரையரங்கு உள்ளிட்ட இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அறிவித்தார்.