இந்தியாவில் கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் மக்களை சிரமப்படுத்தி வருகிறது. கொரோனாவை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்தது. கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கி இருக்கிறது. இதன் காரணமாக மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி இருக்கிறது.

இந்நிலையில் இன்று ஒரே நாளில் 6000 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. நேற்று முன்தினம் 4000, நேற்று 5000, இன்று 6000 என தினசரி 1000 பேருக்கு கூடுதலாக கொரோனா உறுதியாகிறது. இதன் காரணமாக இன்று மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் கடும் கட்டுப்பாடு விதிப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.