
ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள நெமிலி அருகே உள்ள நெல்வாய் கிராமத்தில் நடந்த வன்முறைக்கும் விடுதலை சிறுத்தைகளுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்று பா.ம.க நிறுவனரும் அதன் தலைவரும் இதனை வைத்து வட மாவட்டங்களில் சமூக பதற்றத்தை உருவாக்கிட முயற்சிப்பது பெரும் அதிர்ச்சியை உண்டாக்குகின்றது. மேலும் வி.சி.க-க்கு எதிராக பா.ம.க பரப்பும் வதந்தியை நம்ப வேண்டாம் என பொதுமக்களை கேட்டுக்கொள்கிறோம் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த திருமால்பூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் பெட்ரோல் குண்டுகளை சரமாரியாக வீசி தாக்குதலில் ஈடுபட்டதாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் நெமிலி அடுத்த நெல்வாய் கிராமத்தை சேர்ந்த தமிழரசன், சங்கர், விஜய கணபதி உள்ளிட்டோர் கடந்த 16-ஆம் தேதி திருமால்பூரிலுள்ள விளையாட்டு திடலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். இவர்கள் அனைவரும் பா.ம.க-வை சேர்ந்தவர்கள். மேலும் அங்கு வந்த திருமால்பூரை சேர்ந்த பிரேம், மணிகண்டன், கோபி, வெங்கடேசன், சதீஷ்குமார், தசரதன் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்நிலையில் பா.ம.க-வினரை சாதி பெயரை சொல்லி திட்டியதோடு உடனடியாக அங்கிருந்து ஓட வேண்டும் என்றும் இல்லாவிடில் பெட்ரோலை ஊற்றி அனைவரையும் எரித்து விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். அதன்பின் அங்கிருந்து சென்ற வி.சி.க-வினர் சிறிது நேரத்தில் திரும்பி வந்து பா.ம.க-வினர் மீது பெட்ரோல் கொம்புகளை வீசியுள்ளனர். அவர்கள் வீசிய பெட்ரோல் குண்டுகள் தமிழரசன், விஜய கணபதி ஆகிய இருவர் மீது பட்டு அவர்கள் உடல் முழுவதும் பெட்ரோல் பரவியது. பின்னர் உயிருக்கு பயந்து தப்பி ஓடிய அவர்களை விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 6 பேரும் சுற்றி வளைத்து தீ வைத்துள்ளனர்.
இதனால் படுகாயமடைந்த இருவரும் ஆபத்தான நிலையில் கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த தாக்குதலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஜாதி வெறியும், கட்டுப்படுத்தப்படாத கஞ்சா பழக்கமும் நாம் காரணமாகும். மேலும் ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் இத்தகைய வன்முறைகள் அடிக்கடி நடப்பதற்கு அங்கு கட்டுப்பாடு இல்லாமல் நடைபெறும் கஞ்சா முக்கிய காரணமாகும். இந்த தாக்குதல் சம்பவத்தில் பிரேம் உள்ளிட்ட இருவரை மட்டுமே காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மீதமுள்ள குற்றவாளிகளை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர். மேலும் பெட்ரோல் கொண்டு வீசி கொலை வெறி தாக்குதல் நடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 6 பேரையும் காவல்துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் அதில் ராமதாஸ் தெரிவித்திருந்தார்.