2023-24 மதிப்பீட்டு வருடத்திற்கான வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்வதற்குரிய கடைசி தேதி 31 ஜூலை 2023 ஆகும். இதற்கு முன்பாக ஐடிஆர் தாக்கல் செய்யவேண்டும். ITRல் உங்கள் வருமானத்தின் முழு விபரங்களையும் கொடுக்கவேண்டியது அவசியம் ஆகும். இதை செய்யாவிட்டால் உங்களது ஐடிஆர் படிவம் நிராகரிக்கப்படலாம்.

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும்போது ஏராளமானோர் செய்யும் பொதுவான தவறுகளை தெரிந்துகொண்டால், அந்த தவறுகள் செய்யாமல் உரிய முறையில் வருமான வரியை தாக்கல் செய்யலாம். ஐடிஆர் தாக்கல் செய்யும்போது சரியான படிவத்தை தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியமாகும். மொத்தம் 7 வகையான ஐடிஆர் படிவங்கள் இருக்கிறது.

அதில் உங்கள் வருமானத்துக்கான படிவத்தினை தேர்ந்தெடுத்து நிரப்பவேண்டும். பின் அனைத்து தகவல்களையும் கொடுக்கவேண்டும். வரிவிலக்கு இல்லாவிட்டாலும், பங்கு சந்தையில் முதலீடு, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, அரசின் திட்டங்கள், சம்பளம் மற்றும் இதர தகவல்களை அளிக்கவேண்டும்.

உங்களது சொத்துக்கள் முழுவதையும் வெளியிடாமல் இருப்பது பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். ஐடிஆர் நிரப்பும்போது அசையும் மற்றும் அசையா சொத்துகள் குறித்த தகவல்கள் கொடுக்கப்பட வேண்டும். பிரிவு 80C-ன் கீழ் நீங்கள் ஏதேனும் விலக்கு திட்டங்களில் முதலீடு செய்து இருந்தால், அது தொடர்பான தகவலை ITR-ல் கொடுக்கவில்லை எனில் இழப்பை சந்திக்க நேரிடும்.