மார்ச்சு 10  கிரிகோரியன் ஆண்டின் 69 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 70 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 296 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

298 – உரோமைப் பேரரசர் மாக்சிமியன் வட ஆப்பிரிக்காவில் பேர்பர்களுக்கு எதிரான போரை முடித்துக் கொண்டு, கார்த்திஜ் நகரைச் சென்றடைந்தார்.

1629 – முதலாம் சார்லசு மன்னர் இங்கிலாந்தின் நாடாளுமன்றத்தைக் கலைத்தார். அடுத்த பதினொரு ஆண்டுகளுக்கு நாடாளுமன்றம் இயங்கவில்லை.

1735 – உருசியாவிற்கும் ஈரானின் நாதிர் ஷாவுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி உருசியப் படைகள் அசர்பைஜானின் பக்கூ நகரில் இருந்து வெளியேறின.

1801 – பிரித்தானியாவில் முதலாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது.

1804 – லூசியானா வாங்கல்: லூசியானாவை அதிகாரபூர்வமாக பிரான்சிடம் இருந்து ஐக்கிய அமெரிக்காவுக்குக் கையளிக்கும் நிகழ்ச்சி மிசூரி, செயிண்ட் லூயிசில் நடைபெற்றது.

1814 – பிரான்சில் லாவோன் என்ற இடத்தில் நெப்போலியன் பொனபார்ட்டின் படைகள் தோற்கடிக்கப்பட்டன.

1830 – அரச நெதர்லாந்து கிழக்கிந்திய இராணுவம் அமைக்கப்பட்டது.

1848 – மெக்சிக்கோ-அமெரிக்கப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு குவாடுலுப் கிடால்கோ உடன்படிக்கையை அமெரிக்க மேலவை ஏற்றுக் கொண்டது.

1865 – ஏமி ஸ்பெயின் என்ற அமெரிக்க அடிமைப் பெண், தனது முதலாளியிடம் இருந்து திருடிய குற்றத்திற்காகத் தூக்கிலிடப்பட்டாள்.

1876 – அலெக்சாண்டர் கிரகாம் பெல் உலகின் முதல் வெற்றிகரமான தொலைபேசி அழைப்பை மேற்கொண்டார்.

1893 – ஐவரி கோஸ்ட் பிரெஞ்சுக் குடியேற்ற நாடாகியது.

1902 – துருக்கியின் டோச்சாங்கிரி என்ற நகர் நிலநடுக்கத்தினால் முற்றாக அழிந்தது.

1906 – வடக்கு பிரான்சில் குரியேரெஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற நிலக்கரிச் சுரங்க விபத்தில் 1,099 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

1909 – மலேசியத் தீபகற்பத்தின் கடாரம், கிளாந்தான், பெர்லிஸ், திராங்கானு உள்ளடங்கிய இறைமையை ஆங்கிலோ-சியாம் உடன்படிக்கையின் படி தாய்லாந்து பிரித்தானியாவுக்கு விட்டுக் கொடுத்தது.

1911 – இலங்கையில் ஐந்தாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடாத்தப்பட்டதில் மொத்தத் தொகையான 4,092,973 இல் யாழ்ப்பாணத்தில் 40,441 பேர் பதிவாயினர்.[1]

1922 – கிளர்ச்சியைத் தூண்டினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் மகாத்மா காந்தி ஆறாண்டு கால சிறைத்தண்டனை பெற்றார். ஆனாலும் இரண்டாண்டுகளில் குடல்வாலழற்சி காரணமாக விடுதலையானார்.

1933 – கலிபோர்னியாவின் லோங் கடற்கரையில் இடம்பெற்ற 6.4 அளவு நிலநடுக்கம் காரணமாக 120 பேர் உயிரிழந்தனர்.

1945 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்க வான்படையினர் டோக்கியோ மீது குண்டுகள் வீசியதில் 100,000 பேர் வரை கொல்லப்பட்டனர்.

1948 – இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.

1952 – கியூபாவில் புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டா தலைமையில் இராணுவப் புரட்சி வெற்றி பெற்றது.

1959 – திபெத்திய எழுச்சி: சீனாவினால் கடத்தப்படலாம் என்ற அச்சத்தினால் பல்லாயிரக்கணக்கான திபெத்தியர் தலாய் லாமாவின் மாளிகையைச் சூழ்ந்து கொண்டு அவருக்குப் பாதுகாப்பளித்தனர்.

1970 – வியட்நாம் போர்: அமெரிக்கத் தளபதி ஏர்னெஸ்ட் மெடினா வியட்நாமில் 1968 இல் நிகழ்த்திய மை லாய் படுகொலைகளுக்காக குற்றம் சாட்டப்பட்டான்.

1977 – யுரேனஸ் கோளைச் சுற்றி வளையங்களை வானியலாளர்கள் கண்டுபிடித்தனர்.

1982 – கோள்கள் அனைத்தும் சூரியனின் ஒரு பக்கத்தில் வரிசையில் காணப்பட்டன.

1990 – எயிட்டியில் இடம்பெறற இராணுவப் புரட்சியில் புரொஸ்பர் அவ்ரில் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

2003 – விடுதலைப் புலிகளின் வணிகக் கப்பல் இலங்கைக் கடற்படையினரால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டதில் 11 போராளிகள் கொல்லப்பட்டனர்.

2006 – செவ்வாய் உளவு சுற்றுக்கலன் செவ்வாய்க் கோளை அடைந்தது.

2011 – சப்பானின் ஒன்சூ தீவில் வட கிழக்குப் பகுதியில் 8.9 புள்ளிகள் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டு ஆழிப்பேரலையாக உருவெடுத்தது. பெரும் எண்ணிக்கையானோர் உயிரிழந்தனர்.

இன்றைய தின பிறப்புகள்

1628 – மார்செல்லோ மால்பிகி, இத்தாலிய மருத்துவர், உயிரியலாளர் (இ. 1694)

1760 – தோமசு மெயிற்லண்ட், பிரித்தானிய இலங்கையின் 2-வது ஆளுநர் (இ. 1824)

1762 – ஜெர்மியாசு பெஞ்சமன் ரிச்டர், செருமானிய வேதியியலாளர் (இ.1807)

1798 – பியர்ரே பிரெடெரிக் சாரசு, பிரான்சியக் கணிதவியலாளர் (இ. 1861)

1845 – உருசியாவின் மூன்றாம் அலெக்சாந்தர் (இ. 1894)

1867 – லில்லியன் டி வால்டு, அமெரிக்கத் தாதி, மனிதநேயவாதி (இ. 1940)

1884 – மா. மங்களம்மாள், ஈழத்துக் காந்தியவாதி, சமூக சீர்திருத்தவாதி, பெண்ணியவாதி, அரசியல்வாதி (இ. 1971)

1886 – செகவீர பாண்டியனார், தமிழகத் தமிழறிஞர் (இ. 1967)

1914 – கா. பொ. இரத்தினம், இலங்கைத் தமிழறிஞர், அரசியல்வாதி (இ. 2010)

1920 – மணியம்மையார், திராவிடர் கழகத்தின் தலைவர், சொற்பொழிவாளர், எழுத்தாளர் (இ. 1978)

1921 – எம். வி. ராஜம்மா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. 1999)

1932 – உடுப்பி ராமச்சந்திர ராவ், இந்திய இயற்பியலாளர், பொறியியலாளர்

1933 – பாவலரேறு பெருஞ்சித்திரனார், தமிழ்த்தேசிய உணர்வாளர் (இ. 1995)

1933 – பழ. நெடுமாறன், தமிழக அரசியல்வாதி, தமிழ்த் தேசிய உணர்வாளர்

1934 – எம். கே. நாராயணன், கேரள அரசியல்வாதி

1936 – செப் பிளாட்டர், சுவிட்சர்லாந்துத் தொழிலதிபர்

1939 – அஸ்கர் அலி என்ஜினியர், இந்திய செயற்பாட்டாளர், எழுத்தாளர் (இ. 2013)

1940 – சக் நோரிஸ், அமெரிக்க நடிகர், தற்காப்புக் கலை வீரர்

1949 – பில் பக்ஸ்டன், கனடியக் கணிணி அறிவியலாளர்

1952 – மோர்கன் சுவாங்கிராய், சிம்பாப்வேயின் 2வது பிரதமர்

1957 – உசாமா பின் லாதின், அல் காயிதா அமைப்பை ஆரம்பித்த சவுதி அரேபியர் (இ. 2011)

1957 – தாணு பத்மநாபன், இந்திய இயற்பியலாளர், பேராசிரியர் (இ. 2021)

1958 – ஷாரன் ஸ்டோன், அமெரிக்க நடிகை

1971 – ஜான் ஹாம், அமெரிக்க நடிகர்

1974 – பிஸ் ஸ்டோன், டுவிட்டரை ஆரம்பித்த அமெரிக்கத் தொழிலதிபர்

1984 – ஒலிவியா வைல்ட், அமெரிக்க நடிகை

இன்றைய தின இறப்புகள்

483 – சிம்ப்ளீசியுஸ் (திருத்தந்தை)

1872 – ஜிசொப்பி மாசினி, இத்தாலிய ஊடகவியலாளர், அரசியல்வாதி (பி. 1805)

1897 – சாவித்திரிபாய் புலே, இந்தியக் கவிஞர், செயற்பாட்டாளர் (பி. 1831)

1913 – ஹேரியட் டப்மேன், அமெரிக்க தாதி, செயற்பாட்டாளர் (பி. 1820)

1966 – பிரிட்சு ஜெர்னிகி, நோபல் பரிசு பெற்ற டச்சு இயற்பியலாளர் (பி. 1888)

1973 – குழிக்கரை காளிதாஸ் பிள்ளை, தமிழக நாதசுவரக் கலைஞர் (பி. 1913)

1978 – பொபிலி அரசர், தென்னிந்திய அரசியல்வாதி, சென்னை மாகாண முதல்வர் (பி. 1901)

1979 – எஸ். டி. சுந்தரம், தமிழக எழுத்தாளர், நாடகாசிரியர், நடிகர், கவிஞர், திரைப்பட இயக்குநர் (பி. 1921)

1999 – குசுமாகரசு, மராத்திய எழுத்தாளர் (பி. 1912)

2001 – சி. ஜே. எலியேசர், ஈழ-ஆத்திரேலியக் கணிதவியலாளர், தமிழ் தேசிய செயற்பாட்டாளர் (பி. 1918)

2012 – பிராங்க் செர்வுட் ரோலண்ட், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர் (பி. 1927)

2016 – பீ. எம். புன்னியாமீன், இலங்கை எழுத்தாளர், வெளியீட்டாளர், ஊடகவியலாளர், விக்கிப்பீடியர் (பி. 1960)

இன்றைய தின சிறப்பு நாள்

பெரும் இனவழிப்பு நினைவு நாள் (பல்காரியா)

திபெத்திய எழுச்சி நாள்