சென்னை ரயில் நிலையத்திலிருந்து கோயம்புத்தூர் வரை போகும் வந்தே பாரத் ரயில் சேவையை 8-ஆம் தேதி (நாளை) பிரதமர் மோடி சென்னையில் துவங்கி வைக்கிறார். இந்த ரயில் சென்னையிலிருந்து காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், திருப்பூர் வழியே கோயம்புத்தூர் வரை இருமார்க்கமாகவும் இயக்கப்படுகிறது.

இந்நிலையில் சென்னை-கோவை இடையிலான வந்தே பாரத் ரயிலின் முன்பதிவு தற்போது தொடங்கி இருக்கிறது. இந்த ரயிலில் உணவுடன் சேர்ந்து குளிர்சாதன சேர் கட்டணமாக ரூ.1,215 நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதே நேரம் உணவு வேண்டாம் என்றால் ரூ.1,057 கட்டணம் செலுத்தவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.