பெங்களூருவில் நேற்று மதியம் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பைக் ஓட்டிசெல்லும் ஒருவர் தன் வாகனத்தின் பின் புறம் நபர் ஒருவரை 1 கி.மீ. தொலைவுக்கு சாலை வழியே இழுத்து சென்று உள்ளார். அந்த பைக் ஓட்டுனர், இந்த நபரின் கார் மீது மோதி இருக்கிறார் என கூறப்படுகிறது. இதன் காரணமாக கார் ஓட்டுநர், பைக்கை ஓட்டி வந்தவரிடம் நிற்கும்படி கூறி உள்ளார். இருப்பினும் அவர் நிற்காமல் தப்பிசென்றுள்ளார். இதனால் அவரை பிடிக்க முயன்ற நிலையில், அவரது பைக்கின் பின் பகுதியை கார் ஓட்டுனர் பிடித்து உள்ளார்.

இதன் காரணமாக வழியெங்கும் அவரை இழுத்துகொண்டே பைக்கில் சென்றவர் பயணித்துள்ளார். அதன்பின் வேறொரு பைக்கில் வந்த நபர் ஒருவர் மற்றும் ஆட்டோவில் வந்தவர் உதவியுடன் அந்த பைக் நிறுத்தப்பட்டது. இதனிடையில் பைக்கில் இழுத்து செல்லப்பட்ட நபரின் ஆடைகள் கிழிந்து இருந்தது. இதுகுறித்த வீடியோ வைரலானதை அடுத்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் ஓட்டுனர் முத்தப்பா (55) என அடையாளம் காணப்பட்டுள்ளார். தற்போது அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையில் பைக் ஓட்டி சென்றவரை பிடித்து சென்று காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.