வாரிசு திரைப்படம் வெளியானதிலிருந்து முழு சட்டை மாறன் ஒரு பக்கம் கவனம் ஈர்த்து வருகின்றார். காரணம் படத்திற்கு பாசிட்டிவ் ரிவ்யூ கொடுக்க அவர் ஒரு கோடி பெற்றதாக பேசப்பட்டு வந்தது. எனினும் வழக்கத்திற்கு அதிகமாக நெகட்டிவ் ரிவ்யூகளை கொடுத்து வாரிசு திரைப்படத்தை ஹிந்தி மெகா சீரியல் போல இருப்பதாக வறுத்தெடுத்து ரிவியூவை முன்வைத்தார் ப்ளூ சட்டை. படம் எடுக்க இயக்குனர்களும் நடிகர்களும் கடுமையாக உழைப்பதாகவும் பல தியாகங்களை செய்வதாகவும் கூறிய வம்சி சீரியல் போல இருக்கின்றது என்ற கருத்து சீரியல்களையும் சேர்த்து இழிவுபடுத்துவதாகவே இருக்கின்றது என்றார்.
மேலும் படங்களை போடவே ஒரு கிரியேட்டிவ் ஜாப் எனவும் தான் பிரில்லியண்டான படம் எடுக்கவில்லை என்றும் என்டர்டைன்மெண்ட் செய்யக்கூடிய கமர்சியல் படம் மட்டுமே எடுத்திருப்பதாக நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். இதனை தொடர்ந்து உண்மையை சொன்னால் ஏன் கொந்தளிக்கின்றார் என்றும் டான்ஸ் பிராக்டீஸ், டயலாக் பிராக்டீஸ் இதுக்கு பேர் எல்லாம் தியாகமா என ட்வீட் செய்துள்ளார் ப்ளூ சட்டை. மேலும் இதே கருத்துக்களை வலியுறுத்தும் மீம்ஸ்களை தேடிப்பிடித்து ட்விட் போட்டு ஒருபுறம் வம்சியை ரோல் செய்து வர நெட்டிசன்கள் அவர் அப்படி சொல்வது இருக்கட்டும் நீங்க மட்டும் இப்படி நெகட்டிவிட்டி ஸ்பிரிட் பண்ணி தானே சம்பாதிச்சுக்கிட்டு இருக்கீங்க என கருத்து பதிவிட்டு வருகின்றனர்.