பிரபல நடிகர் அஜித் எச்‌. வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் தற்போது துணிவு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கடந்த 11-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசான நிலையில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதே நாளில் தளபதியின் வாரிசு திரைப்படமும் ரிலீஸ் ஆன நிலையில் வாரிசு படத்தை விட துணிவு திரைப்படம் தான் வசூல் வேட்டை நடத்தி வருவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடிகர் அஜித் துணிவு திரைப்படத்தை தொடர்ந்து ஏகே 62 திரைப்படத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த படத்தின் சூட்டிங் விரைவில் தொடங்கப்படும் நிலையில், அனிருத் இசை அமைக்க லைகா நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தில் நடிகர் சந்தானம் காமெடி ரோலில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது ஹீரோவாக மட்டும் நடித்துக் கொண்டிருக்கும் சந்தானம் அஜித் கேட்டதற்காக காமெடி ரோலில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் ஏகே 62 திரைப்படத்தில் நடிப்பதற்காக சந்தானம் தன்னுடைய சம்பளத்தை டபுள் மடங்கு உயர்த்தி உள்ளதாகவும் அந்த சம்பளத்தை தயாரிப்பு நிறுவனம் கொடுக்க தயாராகி விட்டதாகவும் கூறப்படுகிறது.