இந்திய அளவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் தமன்னா. இவர் தமிழ், தெலுங்கு, மராட்டி, மலையாளம் மற்றும் ஹிந்தி சினிமாக்களில் நடித்து வருகிறார். இவருக்கு தற்போது தெலுங்கு மற்றும் தமிழில் போதிய வாய்ப்புகள் இல்லாத நிலையில் பாலிவுட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். அதோடு மலையாள சினிமாவிலும் நடிகை தமன்னா ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீப காலமாகவே நடிகை தமன்னா பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலிப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

இதை உறுதிப்படுத்தும் விதமாக தமன்னா மற்றும் விஜய் வர்மா அடிக்கடி பல இடங்களுக்கு சேர்ந்து செல்கிறார்கள். புத்தாண்டு பண்டிகையின் போது இருவரும் சேர்ந்து எடுத்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் நடிகை தமன்னா மற்றும் விஜய் வர்மா ஒரு மீடியா நிகழ்ச்சியில் தற்போது ஒன்றாக கலந்து கொண்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. மேலும் இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் பலரும் தமன்னா மற்றும் விஜய் வர்மா அருமையான ஜோடி என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

 

 

View this post on Instagram

 

A post shared by @varindertchawla