வருடம்தோறும் பிப்ரவரி 14-ம் தேதி அன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் காதலர்கள் மகிழ்ச்சியாக கொண்டாடுவதற்காக பக்கத்தில் உள்ள கடற்கரை, பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு செல்வது வழக்கம். வழக்கம் போல இது போன்ற இடங்களுக்கு செல்வது சலித்து போய் இருப்பதால் ஏதாவது புதிய இடத்திற்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கலாம். அப்படி யோசிப்பவர்கள் உடனடியாக வெளிநாடு மாநிலங்களுக்கு சுற்றுலா செல்ல திட்டமிடுவார்கள்.

ஆனால் இவையும் கூட பலர் பார்த்து ரசித்து சுற்றுலா இடங்கள் தான். எப்போதாவது சுற்றுலா கொண்டாட்டங்களுக்காக அந்தமான் தீவுப் பகுதிக்கு சென்றது உண்டா? அப்படி ஏதாவது திட்டம் இருந்தால் அதை நிறைவேற்றிக் கொள்ள இப்பொழுது சரியான வாய்ப்பு ஒன்றை ஐஆர்சிடிசி வழங்குகிறது. பசுமை போர்வை போர்த்தியது போல இருக்கும். சுற்றிலும் கடல் நடுவே இயற்கையான சூழல் என்று மாபெரும் அனுபவத்தை இந்த தீவு கொடுக்கும்.

அந்தமான் தீவுகளுக்கு ஐந்து இரவு ஆறு பகல் பொழுதுகளை கொண்ட சுற்றுலா திட்டத்தை ஐஆர்சிடிசி அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக பிப்ரவரி 14-ம் தேதி அன்று பரதாங் தீவில் பொழுதை கழிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு போர்ட் பிளேயர், ரோஸ் தீவு, ராதா நகர், கடற்கரை உள்ளிட்ட பல இடங்களை சுற்றி பார்க்கலாம். தங்கும் விடுதிகளில் மூன்று பேர் கொண்ட அறையை பகிர்ந்து கொண்டால் கட்டணம் 57 ஆயிரத்து 180 ஆகும். அதுவே ஒரு நபர் கொண்ட அறை வேண்டுமென்றால் கட்டணம் 73 ஆயிரத்து 330.

அதுவே இரண்டு பேர் பகிர்ந்து கொள்ளும் அறைகளில் தங்கின்னால் ஒரு நபருக்கான கட்டணம் 58 ஆயிரத்து 560 ஆகும். இவ்வாறு நீங்கள் செலுத்தும் கட்டணத்தில் உங்களுடைய பயணத்திற்கான விமான கட்டணம், சுற்றுலா இடங்களை பார்வையிடுவதற்கான வாகன ஏற்பாடு, சொகுசு படகு வசதி ஆகியவை கிடைக்கும். மேலும் நுழைவு கட்டணங்கள், ஜிஎஸ்டி ஆகிய அனைத்தும் இதில் அடங்கிவிடும்.

காலை மற்றும் இரவு உணவு அனைத்தும் வழங்கப்பட்டு விடும். அதுமட்டுமின்றி இந்த பயணத்திற்கு பங்கு பெறும் நபர்கள் 48 மணி நேரத்துக்கு முன்னதாக எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றோடு வரவேண்டும். விருப்பமுள்ளவர்கள் ஐஆர்சிடிசி இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.