வருடம் தோறும் பிப்ரவரி 14-ஆம் தேதி அன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் காதலித்துக் கொண்டிருப்பவர்கள், திருமணம் செய்பதவர்கள், காதலித்து திருமணம் செய்தவர்கள் என அனைவரும் தங்களுடைய காதலி அல்லது காதலனிடம் தினந்தோறும் அன்பை வெளிப்படுத்தினாலும் இந்த நாளன்று அன்பை வெளிப்படுத்துவதை ஒரு மறக்க முடியாத நினைவாக கொண்டாடுகிறார்கள்.

பிப்ரவரி 7 ஆம் தேதி உலக காதலர் வாரம் ஆரம்பிக்கிறது. இந்த மாதத்தில் பிப்ரவரி 7 இல் ஆரம்பித்து பிப்ரவரி 14-ம் தேதி வரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஸ்பெஷல் ஆக இருக்கும். பிப்ரவரி 7ஆம் தேதி ரோஜா தினம். இந்த தினத்தில் காதலர் அல்லது காதலிக்கு ரோஜா பூக்களை பரிசாக கொடுக்கலாம்.

பிப்ரவரி எட்டாம் தேதி ப்ரொபோஸ் டே. இந்த நாளில் உங்களுடைய துணைக்கு விருப்பமான இடத்தை தேர்வு செய்து விருப்பமான பரிசு பொருட்களை வாங்கி கொடுத்து பிரபோஸ் செய்யலாம்.

பிப்ரவரி ஒன்பதாம் தேதி சாக்லேட் டே. இந்த நாளில் காதலர் அல்லது காதலிக்கு பெரிய சாக்லேட்டை வாங்கி கொடுக்கலாம். சாக்கலேட்டில் ட்ரைப்டோஃபன் என்ற மூலப்பொருள் அதிகமாக இருக்கிறது. அது நம் உடலில் உள்ள உற்சாகத்தை ஏற்படுத்தக்கூடிய செரோடின் என்ற ஒரு அமிலத்தை சுரக்கிறது.

பிப்ரவரி 10ஆம் தேதி டெட்டி தினம். இந்த நாளில் கிப்டாக டெடி பியர் வழங்கலாம். டெட்டி கள்ளம், கபடம் அற்றது. மென்மையானது மற்றும் உறவை மேம்படுத்த இது ஒரு சிறந்த பரிசாக இருக்கும்.

பிப்ரவரி 11 வாக்குறுதி தினம் இந்த நாளில் காதல் உறவில் நம்பிக்கை ஏற்படுத்தக்கூடிய தொடக்கமாக இருக்கிறது.

பிப்ரவரி 12 தழுவுதல் தினம் இந்த நாளில் கட்டி அணைக்கும் பொழுது அன்பு, மகிழ்ச்சி, காதல் வெளிப்படுகிறது.

கடைசி நாள் முத்த தினம். இந்த நாளில் அக்கறையுடன் காதல் துணைக்கு முத்தமிடுங்கள். காதல் மொழி பேசும் மற்றொரு விஷயம் முத்தம். முத்தம் அன்பை காண்பிக்கும் இனிமையான வடிவம். அன்பை வெளிப்படுத்த எவ்வளவோ வழிகள் இருக்கலாம். ஆனால் த முத்தத்தின் மூலம் அன்பை வெளிப்படுத்தும் விதமே தனி தான்