வருகிற பிப்,.7 ஆம் தேதி முதல் காதலர் வாரம் தொடங்க இருக்கிறது. காதலர் வாரத்தின் முதல்நாள் ரோஸ் டே, பின் ப்ரோபோஸ் டே, சாக்லேட் டே, ப்ராமிஸ் டே, ஹக் டே, கிஸ் டே மற்றும் காதலர் தினம் பிப்ர,.14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

ரோஸ் டே

காதலர் வாரத்தின் முதல் நாளான பிப்,.7-ம் தேதி ரோஸ் டே கொண்டாடப்படுகிறது. அந்த நாளில்  அன்புக்குரியவர்களுக்கு ரோஜா பூவை பரிசளிப்பது வழக்கம்.

ப்ரொபோஸ் டே

காதலர் வாரத்தின் 2-வது நாளான பிப்,.8-ஆம் தேதி ப்ரொபோஸ் டே கொண்டாடப்படுகிறது. இந்நாளில் காதலர்கள் மாறிமாறி தங்களுடைய காதலை சொல்வார்கள்.

சாக்லேட் டே

காதலர் தினத்தின் 3-வது நாளான பிப்,.9-ஆம் தேதி சாக்லேட் டே கொண்டாடப்படுகிறது. இந்நாளில் காதலர்கள் மாறிமாறி சாக்லேட் வாங்கி கொடுப்பார்கள்.

டெடி டே

பிப்,.10ம் தேதி டெடிடே கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அன்பானவர்களுக்கு டெடிபியர்களை பரிசாக கொடுக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது.

ப்ரோமிஸ் டே

காதலர் வாரத்தின் 5வது நாளான பிப்,.11 ஆம் தேதியன்று ப்ரோமிஸ் டே கொண்டாடப்படுகிறது. இந்நாளில் மக்கள் நண்பர்கள், காதலர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு வாக்குறுதி அளிக்கின்றனர்.

ஹக் டே

பிப்,.12 ஆம் தேதியன்று ஹக் டே கொண்டாடப்படுகிறது. இந்நாளில் அக்கறையையும், பாசத்தையும் காட்ட அன்பானவர்களின் அன்பை அரவணைத்து கொண்டாடுவார்கள்.

கிஸ் டே

பிப்,.13 ஆம் தேதியன்று காதலர்களால் கிஸ் டே கொண்டாடப்படுகிறது. இந்நாளில் காதலர்கள் மாறி மாறி முத்தங்களை கொடுத்து தங்களுடைய அன்பை பரிமாற்றி கொள்வர்.

காதலர் தினம்

காதலர்கள் அனைவரும் எதிர்பார்த்த காதலர் தினம் பிப்,.14 ஆம் தேதியன்று கொண்டாடப்படுகிறது. காதலர் வாரத்தின் அனைத்து நிகழ்வுகளுக்கும் ஒன்றாக கொடுக்கும் நாளாக இது பார்க்கப்படுகிறது.