இந்தியா முழுவதும் H3N2 இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் வேகமெடுத்து வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் தற்போது குஜராத் மாநிலத்தில் முதல் மரணம் பதிவாகி உள்ளது. வதோதராவை சேர்ந்த 58 வயது பெண் ஒருவர் உயர் ரத்த அழுத்த நோயாளியாக இருந்த நிலையில், சாயாஜி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இறந்ததாக சொல்லப்படுகிறது.

H3N2 வைரஸ் பரிசோதனைக்காக மாதிரிகள் புனே ஆய்வகத்துக்கு அனுப்பப்படும் என நிர்வாகமானது தெரிவித்துள்ளது. பன்றிக் காய்ச்சலால் (H1N1) உருவான வைரஸ் காரணமாக நாட்டில் ஏற்பட்ட 3-வது மரணம் இதுவாகும். முன்பாக கர்நாடகாவில் 82 வயது முதியவர் ஒருவர் மரணம் அடைந்தார். அதேபோல் ஹரியானாவில் கல்லீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்ட 52 வயது நபர் இந்த வைரஸால் மரணமடைந்தார்.