கேரள மாநிலம் திருச்சூரில் பாஜகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, கேரளாவில் ஆளும் கட்சியாக இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியும் எதிர்கட்சியான காங்கிரஸும் மோதி கொள்கிறது. கம்யூனிஸ்டு கட்சியை ஒட்டுமொத்த உலகமும் புறக்கணித்து விட்டது. அவர்கள் தங்களுடைய இருப்பை தக்க வைத்துக்கொள்ள போராடும் நிலையில், எதிர்க்கட்சியான காங்கிரஸ் தனக்கான அவசியத்தை இழந்து புறக்கணிப்பின் விளிம்பில் உள்ளது.

நடந்து முடிந்த திரிபுரா தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட்ட போதிலும் மக்கள் பாஜகவை தான் தேர்ந்தெடுத்தார்கள். பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை தடை செய்ததன் மூலம் கேரளா வன்முறையில் இருந்து மீண்டுள்ளது. இதை செய்தது கம்யூனிஸ்ட்டோ காங்கிரஸோ அல்ல பாஜக தான். வருகின்ற 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவுக்கு மக்கள் ஆதரவு வழங்க வேண்டும். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கேரளாவிலும் ஒட்டுமொத்த நாட்டிலும் வளர்ச்சியை பார்க்க முடியும் என்று கூறினார்.