திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் வடசென்னை அனல்மின் நிலையம் 1994-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த அனல்மின் நிலையத்தில் முதல் யூனிட்டில் உள்ள 3 அலகுகளில் 210 மெகாவாட் வீதம் 630 மெகாவாட் மின்சாரம்  உற்பத்தி செய்யப்படுகிறது. இதே போல் இரண்டாவது யூனிட்டில்  உள்ள 2 அலகுகளின் தலா 600 வீதம் 1,200 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்நிலையில் முதல் யூனிட்டில் 1-வது அலகில் உள்ள கொதிகலன் குழாயில் தற்போது  கோளாறு ஏற்பட்டுள்ளதால், 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே  அதை சரி செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.